Search This Blog

Monday, 1 January 2018

ரூ.5,000 கோடி கடன் கோரும் மின்வாரியம்

துாத்துக்குடி, விருதுநகரில் அமைய உள்ள பிரமாண்ட துணை மின் நிலையங்களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் கேட்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.
திருவள்ளூர், விழுப்புரம், கோவை, விருதுநகரில், 765 கி.வோ., திறனில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில், விருதுநகரில் அமைய உள்ள துணை மின் நிலையத்திற்காக, தமிழக அரசின் வாயிலாக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, மின் வாரியம், கடன் கேட்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர், விழுப்புரம், கோவையில் அமைக்கும் துணை மின் நிலையங்களுக்கு, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' போன்ற நிறுவனங்கள், கடன் வழங்க உள்ளன.
விருதுநகரில், 4,000 கோடி ரூபாய் செலவில், 765 கி.வோ., பிரமாண்ட துணை மின் நிலையம்; துாத்துக்குடியில், 1,000 கோடி ரூபாய் செலவில், 400 கி.வோ., துணை மின் நிலையம் மற்றும் அதற்கான வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் கேட்கப்பட உள்ளது. கடன் ஒப்புதல் கிடைத்ததும், கட்டுமான பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment