Search This Blog

Saturday, 3 February 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து.. ஆட்சிக்கு ஆபத்து... ஜோதிடர்கள் எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர். இதை சரி செய்ய சாந்தி பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளில் நேற்று நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 50 கடைகள் எரிந்து நாசமாகின.
தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவில் நடந்த தீவிபத்தால் உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.

தீத்தடுப்பு கருவிகள் இல்லை

இந்த தீவிபத்துக்கு காரணம் கோயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தனை பேர் வந்து செல்லும் கோயிலில் தீத்தடுப்பு கருவிகள் ஏதும் இல்லை என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

கோயிலில் தீ

கோயில் வளாகத்தில் பயங்கர தீவிபத்து குறித்து தகவலறிந்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மதுரை மாநகருக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா என்றும் கவலையில் உள்ளனர். மக்களின் அச்சம் உண்மைதான் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கோபத்தின் வெளிப்பாடே இந்த விபத்து

இதுகுறித்து ஜோதிட வல்லுநர்கள் கூறுகையில், ஆலயத்தில் ஏற்படும் தோஷங்கள், பூஜ முறைகள், தீட்டு தணிக்கைகள், ஆட்சியில் ஏற்படும் தவறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமே அக்னி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதனால் மன்னருக்கும், மக்களுக்கும், பூசாரிகளுக்கும் ஆபத்து என்பதை எச்சரிக்கும் விதமாக இந்த தீவிபத்து நடந்துள்ளது. கடுங்கோபத்தில் உள்ள மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் சாந்திப்படுத்த அக்னி சாந்தி பூஜைகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குளிர வைக்க வேண்டும்

மன்னருக்கு ஆபத்து என்று சாஸ்திரங்களில் கூறுவது ஆட்சிக்கு ஆபத்தாகவே கருதப்படுகிறது. எனவே ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், அக்னி சாந்தி பூஜை நடத்தி அம்பாளை சாந்திப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மக்களுக்கும் ஆபத்து என்று சாஸ்திரங்கள் கூறுவதால் மக்கள் சிறிது மன சஞ்சலத்துடன் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment