‛பிரதமர் மோடி அவர்களே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உங்கள் பார்லி., தேர்வுக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா?' என பிரதமர் மோடியிடம் பள்ளி சிறுவன் கேட்ட சுவாரஸ்யம் நிகழ்ந்தது.
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், டில்லியில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். மாணவர்களின் ஏராளமான கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
உரையாடலில் பள்ளி மாணவன் பிரதமர் மோடியை மடக்கிய சுவாரஸ்ய நிகழ்வு நிகழ்ந்தது. 11ம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன், ‛நீங்கள் அடுத்த ஆண்டு வரவுள்ள உங்கள் பார்லிமென்ட் தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா?' என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினான்.
அரசியலில் நான் அந்நியன்:
அதற்கு பதலளித்த மோடி தெரிவித்ததாவது: நான் தாமதமாகவே அரசியலுக்குள் நுழைந்தேன். அரசியல் சூழலில் தற்போது நான் இருந்தாலும், இயல்பில் நான் அரசியல்வாதி அல்ல. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன். எனக்கு 1.25 கோடி மக்களின் ஆதரவு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்காக செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொதுத்தேர்வு. எனக்கோ நாளின் 24 மணி நேரமும் தேர்வு தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment