இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க, செசல்ஸ் தீவில் ராணுவ தளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பழைய பட்டு பாதையை மேம்படுத்த துவங்கி உள்ளது. இதுதவிர, இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, செங்கடலை ஒட்டி உள்ள திஜிபவுட்டி நாட்டில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இது சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைகடலுக்கும் ஏமன் வளைகுடா மூலம் செங்கடலுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் ஒரு இணைப்பாக உள்ள இடம். அடுத்த கட்டமாக, இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகம், குத்தகை என்ற பெயரில் சீனா வசம் வந்துள்ளது. இதுதவிர, மாலத்தீவு நாட்டிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இதையடுத்து, இந்திய பெருங்கடல் பகுதியில், மடகாஸ்கர் நாட்டுக்கு அருகே உள்ள செசல்ஸ் தீவில், இந்தியா சார்பில் ராணுவ தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்துடன் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து, சீனாவின் பட்டு பாதைக்கு போட்டியாக ஒரு பொருளாதார மேம்பாட்டு பாதையை, குறிப்பாக விமான நிலையங்கள், துறைமுகங்களை இணைக்கும் சாலை வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment