Search This Blog

Saturday, 17 February 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ரோபோ பாடம் நடத்தும்.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும். தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளோம். 12ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Classes will be conducted by robots for Government school students: Sengottaiyan

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே அமைச்சர் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஓரு பக்கம் 13,000 புதிய ஆசிரியர்களை நியமிக்கிறோம் என சொல்லிவிட்டு 500 ரோபோக்களை கொண்டு பாடம் நடத்துவோம் என அமைச்சர் சொல்வது விந்தை என்று தமிழக ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் தாஸ் நெல்லையில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், ரோபோக்களை வைத்து பாடம் நடத்தப்படும் என்ற அமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சிக்குரியது, என்றும் "அ"என்று கை பிடித்து கற்று கொடுக்கும் தொடு உணர்வு ஆசிரியர் மூலமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.




No comments:

Post a Comment