Search This Blog

Saturday, 10 February 2018

ஜியோவின் இன்டர்நெட் வேகத்தை எகிறவைக்க சீக்ரெட் செட்டிங்ஸ்.

ஜியோவின் இன்டர்நெட் வேகத்தை எகிறவைக்க சீக்ரெட் செட்டிங்ஸ்.!


தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது,அதன்படி புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளன. மேலும் டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது. மேலும் சில ஸ்மார்ட்போன்களில் ஜியோ இணையவேகம் சற்று குறைவாகவே இருக்கும்,இதனை மாற்றவும் ஜியோ இணைய வேகத்தை அதிகரிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.


வழிமுறை-1: 
முதலில் ஜியோ-சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் அமைப்புக்குள் நுழைய வேண்டும்.

வழிமுறை-2: 
அதன்பின்பு செட்டிங்ஸ் அமைப்புக்குள் இருக்கும் mobile networks தேர்வுசெய்து access point names-கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-3: 
மேலும் அவற்றில் இண்டர்நெட் (ஜியோநெட்) என காண்பிக்கும், அதனை தேர்வுசெய்து உள்நுழைய வேண்டும். பின்பு அவற்றில் server-கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-4: 
அடுத்து நீங்கள் கிளிக் செய்த server-பகுதியில் JIO NETCONNET-என்று டைப் செய்ய வேண்டும். 

வழிமுறை-5: 
அதன்பின்பு அந்த செட்டிங்ஸ் பகுதியில் bearer தேர்வுசெய்து, LTE-ஐ கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-6: 
அடுத்து bearer-க்கு கீழே MVNOtype-எனும் விருப்பத்தை தேர்வுசெய்து IMSI-கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-7: 
மேலும் அந்த செட்டிங்ஸ் பகுதியில் உள்ள authentication type-தேர்வுசெய்து PAP or CHAP--கிளிக் செய்யவேண்டும்,அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனை reboot-செய்துவிட்டு பயன்படுத்தினால் இணையவேகம் சற்று அதிகரிக்கும்.





No comments:

Post a Comment