தமிழகம் உள்ளிட்ட, 10 மாநிலங்களில், இன்று முதல், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், 'இ - வே பில்' எனும் இணைய வழி ரசீதை, எடுத்துச் செல்வது கட்டாயம் ஆகிறது.
நாட்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலானதைத் தொடர்ந்து, தடையற்ற வர்த்தகத்திற்காக, மாநிலங்களின் எல்லைப் புறங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக, சரக்கு களை அனுப்புவோர், அது குறித்த விபரங்களை, 'இ - வே பில்' எனும் இணைய வழி ரசீதில், அவர்களே சுயமாக குறிப்பிட்டு, எடுத்துச் செல்லும் நடை முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மாநிலம் விட்டு மாநிலம், சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு, இ - வே பில் பெறுவது, நாடு முழுவதும் கட்டாயமாகி உள்ளது. ஆனால், மாநிலத் திற்குள், சரக்குகளை எடுத்துச் செல்ல, 'இ - வே பில்' பயன்பாடு, தமிழகம் உள்ளிட்ட, 10 மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வருகிறது.பஞ்சாப், மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங் கள், வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு புரிதல் ஏற்படுவதற்காக, காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில், சில வர்த்தகர்கள் எதிர்த்தாலும், பலர், இ - வே பில் பயன் படுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, 75 ஆயிரம் வர்த்தகர்கள், அதற்காக பதிவு செய்துள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் கூறுகின்றனர்.
சரக்கு அனுப்புவோர், ewaybill.nic.in அல்லது, www.ewaybillgst.gov.in. ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே, இ - வேல் பில் பதிவிறக்கம் செய்ய முடியும். உள்ளூரை பொறுத்த வரை, 10 கி.மீ.,க்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும், வாகனங்களுக்கு, இ - வே பில் கட்டாயம்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு, 044 - 28290962; 1800103 6751 ஆகிய எண்களிலும், helpdesk@ctd.tn.gov.in என்ற, இ - மெயில் முகவரியிலும் விளக்கம் பெறலாம்.

No comments:
Post a Comment