Search This Blog

Saturday, 17 February 2018

மதுரையில் கொடூரம் : 9 ஆம் வகுப்பு மாணவியை எரித்த இளைஞர் கைது!

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ள இளைஞர் அவர் மறுப்பு தெரிவித்ததோடு போலீசாரிடமும் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் படித்து வருகிறார் நடுவக்கோட்டையை சேர்ந்த மாணவி. 9ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பாலமுருகன் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதில் உடல் எரிந்து கதறிய மாணவியை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 74 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தப்பியோடிய இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலமுருகன் மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார், இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் புகார் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஆத்திரத்தில் பாலமுருகன் இந்த வெறிச்செயலை செய்துள்ளதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment