Search This Blog

Monday, 26 February 2018

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை : எப்படி பதிவு செய்வது?

டெல்லி: அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகி வரும் நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.   5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, பின்னர் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தை 5 வயதை நிறைவுசெய்த பின், அந்த குழந்தையின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்யப்படும்.

5வயது குழந்தைகளுக்கு ஆதார் 
பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் திட்டம் என பெயரிடப்பட்டு ஆதார் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பால் ஆதார் அட்டை 
இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ வண்ணத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 5 வயது வரை இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.

பெற்றோருடன் இணைக்கலாம் 
பால் ஆதார் பெற்ற குழந்தைகளுக்கு 5 வயது முடிந்த பிறகு அதனுடைய பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும். பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

பிறப்பு சான்றிதழ் 
குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு இ-சேவை மையங்களில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment