Search This Blog

Saturday, 10 February 2018

சுகாதார குறியீட்டில் கேரளத்துக்கு முதலிடம்.. தமிழகம் 3-ஆவது இடம்

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார குறியீடு தரவரிசை பட்டியலில் கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் 3-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

நிதி ஆயோக் என்ற அமைப்பு நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையை தயார் செய்துவருகிறது. அதன் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் காந்த் உள்ளார்.
குழந்தைகள் இறப்பு விகிதம், தடுப்பு ஊசி நடவடிக்கை, முறையான பிரசவம், எய்ட்ஸ் நோயாளிக்கான சிகிச்சை ஆகிய அம்சங்களை வைத்து நாடு முழுவதும் சுகாதார குறியீடு குறித்த ஆய்வை நிதி ஆயோக் நடத்தி வருகிறது.

எத்தனை?

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடத்தை கேரளமும், 2-ஆவது இடத்தை பஞ்சாபும், மூன்றாவது இடத்தை தமிழகமும் பிடித்துள்ளது.

எவை?

சுகாதாரமான சிறிய மாநிலங்களில் மிஸோரம் முதலிடத்தையும் மணிப்பூர் இரண்டாவது இடத்தையும், கோவா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களில் லட்சத் தீவு முதலிடத்தை பெற்றுள்ளது.

எந்த மாநிலங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு முந்தைய இடங்களை பிடித்துள்ளன. செயல்திறனை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொள்ளும் பெரிய மாநிலங்களில் ஜார்க்கண்ட, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

வேகத்தை அதிகரிக்கும்

இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், இந்த குறியீட்டு அறிக்கையானது, சுகாதாரத்துறையில் சுகாதார நிறைவுகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்கும், போட்டி ஆகியவற்றை அதிகரிக்கும் கருவியாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment