Search This Blog

Sunday, 4 February 2018

மஹா.,வில் 11,700 அரசு ஊழியர்களுக்கு சிக்கல்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக மஹாராஷ்டிராவில் 11,700 ஊழியர்களுக்கு வேலை போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குழப்பம்

கடந்த 2017 ஜூலை மாதம், போலி சான்றிதழ் மூலம் பல்கலை மற்றும் அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அவர்களின் பட்டங்களை பறிக்கவும், அரசு பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநில அரசு ஆய்வில் 11,700 ஊழியர்கள் பழங்குடியினர் என போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பதில் மாநில அரசுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர்கள் பலர் பல ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். மேலும் அவர்கள் சிலர் கிளர்க்குகளாக வேலைக்கு சேர்ந்து, தற்போது பதவி உயர்வு மூலம் துணை செயலர் பதவியில் உள்ளனர். இதனால், அவர்கள், பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அரசியல்வாதிகளையும், தொழிற்சங்கத்தினரையும் நாடி வருகின்றனர்.

வழியில்லை

இந்நிலையில், கோர்ட் உத்தரவு தொடர்பாக மாநில அரசு அட்டர்னி ஜெனரல் மற்றும் நீதித்துறையின் கருத்தை கேட்டது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களை காப்பாற்ற வேற வழியே இல்லை என நீதித்துறையும், அட்டர்னி ஜெனரலும் கூறியதாக தெரிவித்தார்.

எத்தனை பேர்

கோர்ட் உத்தரவு தொடர்பாக கடந்த ஜனவரி 20ல் தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சுமித் முலிக் தலைமையில் ஆலோசனை நடந்தது.சுமித் கூறுகையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊழியர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது தெரியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றுவோம் எனக்கூறினார்

No comments:

Post a Comment