மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்திருப்பதாவது:
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். போட்டியை அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் துவக்கி வைக்கிறார். போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடத்தப்படும் தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வழங்கப்படும். போட்டியில் 964 காளைகளும், 623 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகளுக்கு ஏற்கனவே அதன் உரிமையாளர்கள் தகுதி சான்றிதழ் அளித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை நடத்தப்படும். பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. 10 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதிப்பர் , 10 ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ் கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல ஈடுபட உள்ளனர். என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment