Search This Blog

Monday, 8 January 2018

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது சட்டசபைக் கூட்டம்

சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி சட்டசபையை துவங்கி வைத்தார்.
அனைவருக்கும் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி ஆளுநர் தனது பேச்சைத் தொடங்கினார். ஆளுநர் பேச்சைத் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் குதித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து உட்காருங்க என்று ஆளுநர் கூறவே ஆளுங்கட்சியினர் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இது. ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் ஆகும் இது.
ஆளுநர் முதலில் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துகிறார். சபாநாயகர் தனபால் அதை தமிழில் படித்துக் காட்டுவார். இந்த நிகழ்விற்கு பின் கூட்டம் நடந்து முடிவடையும்.
இதன் பின்பாக தமிழக அலுவல் ஆய்வு குழு கூட்டம் 11 மணிக்கு பிறகு நடக்கும். இந்த சட்டசபை கூட்டத்தொடர் எவ்வளவு நாள் நடக்க வேண்டும் என நிறைய விஷயங்கள் இதில் விவாதிக்கப்படும்.
தமிழகத்தில் பேருந்து நிறுத்தம், நீட் பிரச்சனை, ஆர்.கே நகர் தேர்தல் என நிறைய விஷயங்கள் புயலை கிளப்பி இருப்பதால் இந்த கூட்டத்தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முக்கியமாக ஓகி புயலும் பிரச்சனையை கிளப்ப இருக்கிறது.
என்ன மாதிரியான விஷயங்கள் குறித்து விவாதஹிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் நேற்று கூட்டம் கூட்டி விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment