Search This Blog

Wednesday, 3 January 2018

ஆடு மேய்ப்பதற்காக அமெரிக்க விஞ்ஞானி வேலையை உதறி தள்ளிய இந்தியர்..!

மும்பை: பள்ளியில் படிக்கும் போது நீயெல்லாம் ஆடு மேய்க்கத்தான் சரியாக வருவாய் என்று பலர் திட்டு வாங்கி இருப்போம். அப்படித் திட்டு வாங்கியவர்களில் பலர் வெளிநாடுகளில் மிகப் பெரிய பணிகளிலும் இருப்பார்கள்.
இந்தியாவில் தற்போது உள்ள இளவட்டங்களில் பலர் வெளிநாட்டுக் கனவுடன் இருக்கும் நேரத்தில் நாம் இங்குப் பார்க்க இருக்கும் அபிஷேக் ஆடு மேய்ப்பதற்காக அமெரிக்க விஞ்ஞானி வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஒவ்வொரு மாதமும் லட்சங்களைச் சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அபிஷேக் பாரத்
மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் நீர்ப்பாசன துறையின் ஒரு முன்னாள் பொறியாளர் பக்வத் பாரத்க்கு மகனாகப் பிறந்த அபிஷேக் பாரத் சிறு வயது முதல் சிறந்த கல்வியைப் பெற்றது மட்டும் இல்லாமல் சிறு வயது கனவான அமெரிக்க விஞ்ஞானி ஆகியுள்ளார்.

படிப்பு
2008-ம் ஆண்டுப் பஞ்சபராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத் கல்லூரியில் இலங்கலை பட்டம் பெற்று அமரிக்கா சென்று முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் லூசியானா மாநில பல்கலைக்கழகத்தில் டாக்ட்ரேட் பட்டம் பெற்றார்.

விஞ்ஞானி
2013-ம், ஆண்டுப் பி.எச்டி முடித்து டாக்ட்ரேட் பட்டம் பெற்ற இவர் இரண்டு வருடங்கள் தான் படித்த பல்கலைகழத்தில் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் அதில் இவருக்குப் பெரிதாகத் திருப்தி இல்லை.

இந்தியா வருகை
தனது வீட்டில் இந்தியா திரும்புவதாகக் கூறிய போது இவரது முடிவுக்கு வீட்டில் ஒப்புக்கொண்ட வரவேற்றனர். ஆனால் தான் விவசாயம் செய்யப்போவதாகக் கூறிய உடன் இவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆடு வளர்ப்பு
ஆனால் அதில் விடப்படியாக இருந்த அபிஷேக் 20 ஏக்கர் நிலத்தினைக் குத்தகைக்குப் பெற்று அதில் ஆடு வளர்ப்பினை துவங்கியுள்ளார். துவக்கத்தில் 120 ஆடுகளுடன் பண்ணையினைத் துவங்கிய இவரது பண்ணையில் தற்போது 400-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

கர்வம் இல்லை
அதிகம் படித்த கர்வம் இல்லாமல் ஆடு பண்ணையினைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்காகத் தானும் இறங்கி அனைத்து வேளைகளையும் செய்வார் அபிஷேக்.

விவசாயம்
ஆறு ஏக்கர் நிலத்தில் ஆடுகளுக்காக மக்காச்சோளம் மற்றும் தினை போன்றவற்றை விவசாயமும் செய்கிறார்.

வருவாய்
தற்போது ஆட்டுப் பண்ணை மூலமாக ஆண்டுக்கு 12 லட்சம் வரும் வரை வருவாய் ஈட்டும் அபிஷேக்கின் வருவாய் வரும் ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மேலும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்.

உதவி
தன்னைப் போன்றே ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தற்போது அபிஷேக் உதவி வருகிறார். இதற்காக இலவசமாகப் பட்டறை அமைத்துப் பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் ஆலோசனை பெற்று பல விவசாயிகள் பெறும் அளவில் பயன்பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment