கண்டுபிடிப்பு
மெக்சிகோ சிட்டி: உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் ஆராய்ச்சி செய்யும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
தி கிரேட் மாயா அக்குபெர் குழுவினர் மெக்சிகோவின் யூகாடன்
பெனின்சுலாவில் நீருக்கடியில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் ஆய்வில் இறங்கினர். ஓராண்டு ஆய்வுக்குப் பின்னர் நீருக்கடியில் சேக் அக்டன் மற்றும் துலுமில் உள்ள டாஸ் ஓஜோஸ் என்ற குகைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த இரண்டு குகைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.
மாயன் மக்களின் சான்றுகள்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட வருட ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகை இது என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் மாயன்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சிதிலமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.
குகையில் குறியீடுகள்
இந்த கண்டுபிடிப்பு மாயன்கள் வாழ்ந்த இடம், சடங்குகள், குடியேற்றங்கள் பற்றி தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதவுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டா கூறியுள்ளார். இந்த நீர்வழிக்குகையின் மூலம் அமெரிக்கர்கள் முதன் முதலில் வந்து தங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதே போன்று மாயன் நாகரிகத்திற்கான சான்றுகளும் கிடைத்துள்ளதாக ஆண்டா தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டம் என்ன?
மாயன்கள் இந்த குகைகளை கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடுத்தகட்டமாக சேன் ஆக்டன் குகையில் உள்ள நீரின் தரத்தை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பயோ டைவர்சிட்டிக்கான வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடத்தப்பட உள்ளது.
பாதுகாப்பாக வைக்க வேண்டும்
நீர்வழிக்குகை கண்டுபிடிப்பு திட்ட இயக்குனர் ராபர்ட் இந்த கண்டுபிடிப்பிற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்துள்ளார். கடைசியில் கண்டுபிடிப்பு சாத்தியமாகிவிட்டதாகவும், இனி இதனை பாதுகாப்பதே அனைவரின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment