Search This Blog

Friday, 19 January 2018

டிக்கெட் கட்டண உயர்வு: நாளை முதல் எந்த பஸ்சுக்கு எவ்வளவு கட்டணம்?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டண உயர்வு எந்த பேருந்துகளுக்கு எவ்வளவு கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்துகளில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ.5 ஆக உள்ள கட்டணம் ரூ.6 ஆகிறது.
30 கி.மீ வரை ரூ.17 ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.24 ஆக உயருகிறது. குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ-க்கான கட்டணம் 27 ரூபாயிலிருந்து ரூ.42ஆக உயர்த்தப்படுகிறது.

அதிநவீன சொகுசுப் பேருந்தில் 30 கி.மீக்கு 21 ரூபாயிலிருந்து ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்தில் 20வது நிலைக்கு கட்டணம் ரூ.12லிருந்து ரூ.19 ஆகிறது. அதே போல 28 நிலைகள் கொண்ட தொலைவிற்கு பேருந்து கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு 18 ரூபாயில் இருந்து ரூ.27ஆக உயர்கிறது.

வோல்வோ பேருந்தில் கட்டணம் 30 கி.மீக்கு 33 ரூபாயில் இருந்து ரூ.51அக உயர்கிறது. இந்த கட்டண உயர்வு நாளை சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment