Search This Blog

Tuesday, 16 January 2018

வாட்ஸ்அப் குழுவில் பெயர் வந்தால் அறிவிக்கும் - புதிய அம்சம் விரைவில் வருகிறது

வாட்ஸ்அப் பயனர்களுக்கான ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பில் குறிப்பிடும் காரியங்களுக்கான அறிவிப்புகளைப் பயனர்கள் பெறும் வகையிலான அம்சம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புகளைப் பெறும் அம்சம், பேஸ்புக்கில் டெக் செய்வது போன்றதாகும். இதில் குழுவில் உள்ள நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் முன் @ என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

தற்போது ஒரு குழுவில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட பயனரின் பெயரைக் குறிப்பிட்டாலே அதற்கான அறிவிப்புகளைப் பெறும் வகையிலான மற்றொரு அம்சத்தை வெளியிட இந்நிறுவனம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. நவீன ஐஓஎஸ் பீட்டா பதிப்பின் வாட்ஸ்அப்பில் இந்த அம்சம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற தரப்பு பயனர்களுக்கும் இந்த அம்சம் விரைவில் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒரு குழுவில் உங்களைக் குறிப்பிட்டால் அதற்கான அறிவிப்புகளைப் பெறும், அடுத்துவரவுள்ள இந்த அம்சம், முதல் முதலாக டபில்யூஏபீட்டாஇன்ஃபோ-வில் கண்டறியப்பட்டது. இதில் வாட்ஸ்அப் தொடர்பான அம்சங்களையும் மேம்பாடுகளையும் பெற்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சங்களைப் பயன்படுத்துவோர், இதைக் குறித்த ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த ஸ்கிரீன்ஷாட்டில், 'ஜம் டு த பாட்டம்’ பொத்தானுக்கு மேலே மற்றொரு பொத்தான் இருப்பதை காண முடிகிறது. அந்தப் பொத்தானில் @ மற்றும் நான்கு என்ற எண் காட்டுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட வாட்ஸ்அப் குழுவில் உங்கள் பெயரானது நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பதாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அந்தப் பொத்தானைத் தட்டுவதன் மூலம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிக்கு நீங்கள் செல்ல முடியும்.

வாட்ஸ்ஆப்பில் 'டிஸ்மிஸ்' செய்யும் புதிய அம்சம் உருட்டல்.!
உங்களைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை நீங்கள் படிக்காத வரை மட்டுமே இந்தப் பொத்தான் இது போன்ற நிலையில் காட்டப்படும் என்று அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது. மேலும், வாட்ஸ்அப்பில் குழுவில் இன்னும் படித்திராத மெசேஜ்களை ஒவ்வொன்றாக நீங்கள் பார்க்கும் போது, இந்தப் பொத்தான் தானாக மறைந்துவிடும். தற்போது பரிசோதனையின் கீழ் உள்ள இந்த அம்சம், வாட்ஸ்அப் பதிப்பின் ஒரு நிரந்தர அம்சமாக பொதுமக்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது உண்மையிலேயே ஒரு வரம்
பல உறுப்பினர்களைக் கொண்டு, சசுறுசுறுப்பான விவாதங்கள் நடைபெறும் பல வாட்ஸ்அப் குழுக்களில் நீங்கள் ஒரு உறுப்பினராக இருக்கும்பட்சத்தில், எங்கு நீங்கள் குறிப்பிடப்பட்டாலும் உங்களுக்கு அறிவிப்பை அளிக்கக்கூடிய அடுத்துவரவுள்ள இந்த அம்சத்தின் மதிப்பை குறித்து உங்களுக்கு நன்றாக உணர முடியும். ஏனெனில் உங்களை குறிவைத்து நடைபெறும் எந்தொரு விவாதத்தையும் நீங்கள் இழக்காமல் இருக்க உதவக்கூடிய இந்த அம்சம் உண்மையிலேயே ஒரு வரமாக உணருவீர்கள்.

ஏனெனில் பொதுவாக பெரிய வாட்ஸ்அப் குழுக்களை முடக்கி வைக்கும் பழக்கம் கொண்ட நாம், பல முக்கியமான விவாதங்களையும் செய்திகளையும் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தினால், பல செய்திகளை நீங்கள் தவிர்கக நேரிடும். ஆனால் உங்களைக் குறித்து குறிப்பிடும் எதையும் நீங்கள் இழக்காமல், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம்.

புதிய குழு அம்சங்கள்
சமீபகாலமாக, குழுக்களுக்கான பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, குழு நிர்வாகிகளாக இருக்க விரும்புவோருக்கு சம்பந்தப்பட்டவை ஆகும். இதன்படி, சமீபகால பீட்டா பதிப்புகளில் ஒரு புதிய அம்சம் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஒரு குறிப்பிட்ட அறிவிப்பு சிலரது கவனத்தை மட்டும் ஈர்த்து, விவாதங்களைக் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு இடையே மட்டும் நடைபெறும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட குழுக்களை குறிப்பிட்ட நபர்களோடு மட்டும் தொடர்பு கொள்ளும் வகையில் உருவாக்க, குழு நிர்வாகிகளுக்கு உதவும்.
மேலும், வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு சர்வர் நிலை குறைபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, குழு நிர்வாகியின் ஒப்புதல் பெறாமல் யார் வேண்டுமானாலும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து, அந்த குழுவில் நடைபெறும் எல்லா விவாதங்களையும் பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment