Search This Blog

Sunday, 7 January 2018

போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை.. மனம் இருக்கிறது.. செங்கோட்டையன் பேட்டி

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருக்கிறார். போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்க போதுமான நிதி எங்களிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஊதிய உயர்வு உட்பட 7 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில் ''போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை'' என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் ''போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர எங்களிடம் மனம் உள்ளது. ஆனால் அதற்கான பணம் எங்களிடம் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment