Search This Blog

Sunday, 21 January 2018

சர்வதேச விமானங்களில் இந்திய பயணிகளுக்கு அதிரடி சலுகை

புதுடில்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம், வேலை போன்ற காரணங்களுக்காக செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உள்ளூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏராளமான இந்திய விமான நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கின.

இந்நிலையில் சர்வதேச விமான நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி தற்போதைய டிக்கெட் கட்டணத்தில் 30% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் எமிரேட்ஸ் நிறுவனமானது, டில்லியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.13,600, ஐரோப்பாவிற்கு ரூ.34,800, அமெரிக்காவிற்கு ரூ.57,400 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.68,200, ஐரோப்பாவிற்கு ரூ.1,02,400, அமெரிக்காவிற்கு ரூ.1,84,050 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

துர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து கட்டணங்களிலும் 15 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. அபு தாபியின் எதிஹாட் நிறுவனத்தின் விமானங்களில் டில்லியில் இருந்து பாரிஸ் நகருக்கு ரூ.38,361, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரூ.54,932 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டில்லியிலிருந்து லண்டன் செல்ல பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான கட்டணம் ரூ.40,206 ஆகும்.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களில் டில்லியிலிருந்து லண்டன் செல்ல ரூ.35,000யும், நியூயார்க் செல்ல ரூ.54,000யும், மும்பையிலிருந்து லண்டன் செல்ல ரூ.48,000யும், நியூயார்க் செல்ல ரூ.67,000யும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களில் டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல ரூ.58,300யும், சிங்கப்பூர் செல்வதற்கு ரூ.18,700யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment