சென்னை: புதிய அரசியல் கட்சியை துவக்க போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, 'பாபா' படத்தில் வருவது போன்ற கை முத்திரையை, ரசிகர் கூட்டத்தின் போதும், தனது இணையதளத்திலும் பயன்படுத்தியுள்ளார். அந்த சின்னம் சொல்வது என்ன என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
அபான முத்திரை
இதை அஸ்த முத்திரை, அபான முத்திரை என்றும் யோக நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் அந்த முத்திரையை சுற்றி ஒரு பாம்பு உள்ளது. அதே போன்ற பாம்பு வடிவம் ராமகிருஷ்ண மடத்தின் சின்னத்திலும் காணப்படுகிறது.
நடிகர் ரஜினி சில ஆண்டுகளாகவே மகாஅவதார் பாபாஜியை குருவாக நினைத்து அவரையே பின்பற்றி வருகிறார். அவரது கை முத்திரை தான் 'பாபா' படத்திலும் வரும். இத்துடன் ஒரு தாமரை மீது அந்த கை முத்திரை வருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாமரை இந்தியாவின் தேசிய மலர். உடல் தூய்மை, மன தூய்மைக்கு தாமரையை அடையாளம் காட்டுவார்கள். அதே போலும் கை முத்திரையை சுற்றி உள்ள பாம்பு வடிவம், மறுபிறப்பு, முழுமையாக மாற்றமடைதல், சாகாதன்மை உள்ளிட்டவைகளையும் குறிப்பிடுகிறது. ராமகிஷ்ண மடத்தின் சின்னத்தை வடிவமைத்த விவேகானந்தர், அந்த சின்னத்தில் காணப்படும் பாம்பு வடிவை, யோகம் மற்றும் குண்டலினி சக்தியுடன் தொடர்புபடுத்தி விளக்கம் அளித்துள்ளார்.
முத்திரை பலன் என்ன:
கை முத்திரை வடிவங்களில், இது அபான யோக முத்திரை என்றே அழைக்கப்படுகிறது. கையின் நடுவிரலை மட்டும் மடித்து கட்டை விரலுடன் இணைப்பது வாயு முத்திரை; மோதிர விரலுடன் கட்டை விரலை இணைப்பது பிருத்வி முத்திரை. இந்த இரண்டு முத்திரைகளையும் ஒன்று இணைப்பது தான் அபான முத்திரை. அதாவது நடுவிரல் மற்றும் மோதிர விரலை மடித்து அதன் மேல் கட்டை விரல் வர வேண்டும்.
இதை பின்பற்றினால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பது யோக நிபுணர்களின் கருத்து. இதே போல் பரத நாட்டியம், குச்சிபிடி மற்றும் ஒடிசி நடனங்களில் இதேபோன்று ஒரு முத்திரை பின்பற்றப்படும். அதற்கு சிம்மமுக முத்திரை என்று பெயர்.
இதே போன்று ஒரு முத்திரை புத்தர் சிலை மற்றும் ஓவியங்களில் காணப்படும். அதற்கு கருணா முத்திரை என்று பெயர். தீய சக்திகளை விரட்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு என்பது புத்த மதத்தினரின் நம்பிக்கை.

No comments:
Post a Comment