Search This Blog

Thursday, 18 January 2018

பாக்., தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர் தமிழக வீரர்

ஜம்மு: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் வீரமரணம் அடைந்த பி.எஸ்.எப்.,வீரர், தமிழகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78 வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்ததில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்துள்ளது. கடந்த 1976 ல் பிறந்த அவர், 1995ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

No comments:

Post a Comment