Search This Blog

Sunday, 28 January 2018

புதிய செய்தி: பேருந்து கட்டணம் குறைப்பு நாளை முதல் அமல்.

சென்னை : தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 66 சதவீத கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்ட நடத்தினர். இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment