Search This Blog

Saturday, 13 January 2018

தை திருநாள்: பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

தை மாதம் முதல் நாள் அன்று ஆண்டு முழுவதும் அதிகமான மழை பொழியவும், தானியங்கள் நன்கு விளையவும் தெய்வங்களை வணங்கும் பண்டிகை பொங்கல் பண்டிகை.
பூமியின் செழிப்புக்கு காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களை முன்னிட்டு நடத்தப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை.

வீட்டின் நடு கூடத்தில் புதுப்பானை வைத்து புது நெல் அரிசி, புது வெல்லம், நெய் இவைகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்க வேண்டும்.
பொங்கல் வைக்கும் நல்ல நேரம்:
ஞாயிறு என்பதால் காலை சூரிய ஓரையில் 6 மணி முதல் 7 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை நல்ல நேரம் உள்ளது.

No comments:

Post a Comment