Search This Blog

Saturday, 13 January 2018

பாஸ்போர்ட்டில் மாற்றம் - முகவரி இடம்பெறாது. நிறம் மாற்றம்

பாஸ்போர்ட்டில், இருப்பிட விபரங்களை அச்சிடுவதை நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், இனி பாஸ்போர்ட்டை இருப்பிட அடையாளத்துக்காக பயன்படுத்த முடியாது.

பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில், புகைப்படம் மற்றும் தனிநபர் விபரங்கள் இடம் பெறுகின்றன. கடைசி பக்கத்தில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் இருப்பிட முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன.

மாற்றம்:
கடந்த, 2012 முதல், அனைத்து பாஸ்போர்ட்களிலும், 'பார் கோடு' இடம் பெறுகிறது. அதில், அனைத்து விபரங்களும் பதிவாகின்றன. அதனால், பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இனி வழங்கப்பட உள்ள பாஸ்போர்ட்களில் இருந்து, இந்த மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரஞ்ச் நிறம்:
தற்போது, பாஸ்போர்ட் நீல நிறத்தில் உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்கள், புதுப்பிக்கப்படும் வரை செல்லும்.

No comments:

Post a Comment