Search This Blog

Friday, 26 January 2018

குடியரசு தின விழா: 21 குண்டுகளை முழங்கும் டாங்கிகளுக்கு ‛குட்பை'

புதுடில்லி : ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் நடக்கும் குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது சிறிய ரக டாங்கி மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பாரம்பரியம் மிக்க சிறிய ரக டாங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த டாங்கிகள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தாண்டுடன் இந்த டாங்கிகள் ஓய்வு பெறுகின்றன. இவை பழைய ரக டாங்கிகள் என்பதால் இவற்றிற்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடியரசு தின விழா நிகழ்ச்சிக்காக இதை தயார் செய்ய அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் பழைய ரக டாங்கி என்பதால் அணி வகுப்பு நடக்கும் போது ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த நிகழ்ச்சியையே கெடுத்துவிடும் வாய்ப்பும் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த டாங்கிகளுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.
2019ம் ஆண்டு குடியரசு தின விழா முதல் புதிய ரக துப்பாக்கி மூலம் இந்த 21 குண்டு மரியதையை செலுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment