Search This Blog

Tuesday, 2 January 2018

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த அரிய பொருட்கள்

இந்தியாவின் கடந்த இருபது லட்ச வருட வரலாற்றை விளக்கும் பல்வேறு அரிய பொருட்கள் நிறைந்த கண்காட்சி மும்பையில் நடைபெற்று வருகிறது.
"இந்தியா மற்றும் உலகம்: வரலாற்றை விளக்கும் ஒன்பது கதைகள்" என்ற பெயரில் நடைபெற்ற இக்கண்காட்சியானது மொத்தம் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் சிற்பங்கள் மற்றும் மட்பாண்டங்கள் முதல் ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் வரை 228 தொல்பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இது மும்பையின் மிகப்பெரிய அருங்காட்சியமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயத்தில் (CSMVS) நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சி 2018 பிப்ரவரி 18 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்றும், அதன் பிறகு தலைநகர் டெல்லிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கண்காட்சியின் மூலம் "இந்தியாவிற்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் மற்றும் ஒப்பீடுகளை ஆராய்வதே" இந்த அமைப்பின் நோக்கமென்று சி.எஸ்.எம்.வி.எஸ் இயக்குனர் சபியாசச்சி முகர்ஜி குறிப்பிடுகிறார்.
இந்திய துணைக்கண்ட வரலாற்றின் முக்கிய தருணங்களைக் விளக்கும் இந்த சேகரிப்பில், இந்தியாவின் அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் இருந்து 100க்கும் அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன.
"பலூசிஸ்தான் பாட்" (கி.மு.3500 - கி.மு.2800) டெரக்கோட்டாவினால் செய்யப்பட்டதாகும். தற்போதைய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மெஹர்கர் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற மட்பாண்டங்களை போலவே, இது பண்டையக் கலாச்சாரங்களில் பொதுவாகக் காணப்பட்ட பாலிச்சிரோமி என்ற நுட்பத்தை பயன்படுத்தி பல நிறங்களில் வரையப்பட்டிருக்கிறது.
பண்டைய சிந்து நதி நாகரிகத்தை சேர்ந்த காளையின் தங்கம் பூசப்பட்ட கொம்பான (கி.மு.1800) இது, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் பரவலாக காணப்பட்டது.
பசல்ட் ராக் (கி.மு. 250) என்ற இந்த கல்வெட்டு, பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக இருந்த அசோகர் பேரரசின் பிரகடனங்களை கொண்டுள்ளது. மேற்காணும் கல்வெட்டானது மும்பைக்கு அருகிலுள்ள சப்பாரா துறைமுக பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
சிவப்பு மணற்கற்களால் செய்யப்பட்ட இந்த சிற்பம் (கி.மு.150) குஷன் மன்னர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது. முதல் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும்பகுதி மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளை குஷன்கள் ஆட்சி செய்தனர்.
இந்த மணற்கல் சிலை (கி.பி.200 - கி.பி100) பழைமையான இந்திய மதமான சமண மதத்தில் ஆரம்பக்காலத்தில் அறியப்பட்ட தீர்த்தாங்ராவின் (ஆசிரியர்) வடிவம் என்று கருதப்படுகிறது.
இது பீகாரின் தலைநகரான பாட்னாவில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வெண்கல புத்தர் (கி.பி.900 - கி.பி.1000) சிலையானது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு துறைமுக நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் இந்த உருவப்படத்தில் அவர் (கி.பி.1620) மேரியின் சிறிய உருவத்தை வைத்திருப்பதை போன்றுள்ளது. முகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய உத்தரப் பிரதேசத்தில் இது கண்டெடுக்கப்பட்டது.
முகலாய பேரரசர் ஜஹாங்கிர் காணப்படும் (கி.பி.1656 - கி.பி.1661) இந்த வரைபடம் டச்சு கலைஞரான ரம்ப்ராண்ட்டால் வரைபட்டதாகும். முகலாயர்களின் மிகச் சிறிய வரைபடங்களில் அடிக்கடி கருப்பொருளாக இருக்கும் நீதிமன்றம் சார்ந்த சூழலை கண்டு அவர் கவர்ந்தெழுக்கப்பட்டார்.
மர சக்கரம் அல்லது சுழலும் சக்கரம் (கி.பி.1915 - கி.பி.1948) என்று அறியப்படும் இது பிரிட்டனுடனான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தினுடைய உள்நாட்டு எதிர்ப்பின் ஒரு சக்தி வாய்ந்த சின்னமாக மாறியது.

No comments:

Post a Comment