Search This Blog

Tuesday, 9 January 2018

அதிசயம்! சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு.. 15 இன்ச் மூடிய பனிப்படலம்.. சுற்றுலாப் பயணிகள் வியப்பு!

என்னா அழகு .... சஹாரா பாலைவனத்தை மூடிய பனிப்பொழிவு....

வீடியோ கீழே :
பாலைவனத்தில் பனி வீடியோ காண click here

அய்ன்செஃப்ரா: சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டும் பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதி பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன.

சஹாரா பாலைவனம் என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய ஹாட் பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும்.

சஹாரா பாலைவனம்
வடக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள இதன் பரப்பளவு 90 லட்சம் சதுர கிலோமீட்டர்களாகும். இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும்.
சிவப்பு பாலைவனமாகும்

இந்த சஹாரா பாலைவனத்தில் எப்போதும் அனல் காற்றும் புழுதி புயலும் வீசி வரும். இது ஒரு சிவப்பு பாலைவனமாகும்.

சஹாராவில் பனிப்பொழிவு
இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் அய்ன்செஃப்ரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் ஞாயிற்றுக் கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

பனிப்பொழிவால் உற்சாகம்
சுமார் 15 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. இது சுற்றுலாப் வறண்ட சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழி நிலவுவது சுற்றுலாப் பயணிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2016லும் பனிப்பொழிவு
சஹாராவின் அய்ன் செஃப்ரா நகரில் பனிப்பொழிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 1979 ஆண்டும் அய்ன்செஃப்ரா பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதேபோன்றதொரு பனிப்பொழிவு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது.

அரிதான பனிப்பொழிவு
ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று வடக்கு ஆப்பிரிக்காவை நோக்கி இழுப்பதே இந்த பனிப்பபொழிவுக்கு காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இப்பகுதியில் பனிப்பொழிவு என்பது அரிதான ஒன்றுதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment