Search This Blog

Wednesday, 17 January 2018

ஜியோ ரூ.153/-ல் அதிரடி திருத்தம்; ஜியோபோன் வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷடம்.!

எப்போதுமே மிகவும் "ஆடம்பரமான" முறையில் அறிவிப்புகளை நிகழ்த்தும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சத்தமின்றி மிகவும் அமைதியாக ஒரு அறிவிப்பை நிகழ்த்தியுள்ளது.

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ
அந்த அறிவிப்பின் படி, நிறுவனத்தின் ரூ.153/- என்கிற கட்டண திட்டத்தில் அட்டகாசமான திருத்தமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி இந்த ஜியோ ரீசார்ஜ் ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த ரூ153/- திட்டமானது நிறுவனத்தின் மலிவான 4ஜி பீச்சர் போன் ஆன ஜியோபோன்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பு முடிந்த பின்னர் 64 கேபிபிஎஸ்
இந்த புதிய திருத்தமானது, ப்ரீபெய்ட் பயனர்களுக்கான நிறுவனத்தின் புதிய கட்டண திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இனி ரூ 153/- திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் திருத்தப்பட்ட பேக் நன்மைகளை பெறுவார்கள். இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பின்னர், தரவு வேகமானது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

500எம்பி அளவிலான டேட்டா
முன்னதாக, ஜியோபோனிற்கான ரூ.153/- திட்டமானது, நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டா என்கிற விகிதத்தில் மொத்தம் 28 நாட்களுக்கு 14ஜிபி அளவிலான தரவை வழங்கியது. உடன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கியது.
28 நாட்களுக்கு செல்லுபடி
இனி இந்த திட்டம் கூடுதலாக 14ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் இந்த திருத்தத்தின் வழியாக ரூ.153/- ஆனது நிறுவனத்தின் ரூ.143/- ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகளுடன் பொருந்துகிறது. அதாவது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகவும் 28ஜிபி அளவிலான டேட்டா, எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

டேட்டா உடன் வரம்பற்ற குரல்
ஒருவேளை 1ஜிபி அளவிலான வரம்பிற்கு உட்பட்ட டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் நிறுவனத்தின் ஷேஷட் திட்டங்களை அணுகலாம். அதாவது ரூ.24/- மற்றும் ரூ.54/- என்கிற திட்டங்களை அணுகலாம். இந்த இரண்டு திட்டங்களும் நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், செல்லுபடியாகும் காலம் வரையிலான 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
ஸ்மார்ட் பீச்சர் போன்
ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் ரூ.24/- திட்டமானது இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். மறுகையில் உள்ள ரூ.54/- திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்குசெல்லுபடியாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் ஆனது இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் பீச்சர் போன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

2000எம்ஏஎச் பேட்டரி
நிறுவனத்தின் முக்கிய சில்லறை கடைகளில்வாங்க கிடைக்கும். இந்த ஜியோபோனின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் - 2.4 இன்ச் க்யூவிஜிஏ டிஸ்ப்ளே, ஸ்ப்ரெட்ட்ரம் எஸ்சி9820எ / க்யூசி8905 எஸ்ஓசி உடனான மாலி 400ஜிபியூ மற்றும் 512எம்பி ரேம், கைஓஎஸ் (KaiOS), 2000எம்ஏஎச் பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி ஆகியவைகளை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment