Search This Blog

Saturday, 30 December 2017

அதிரடி: ஜூன் 2018 வரை ஏர்டெல் டிவியின் இலவச சந்தா அறிவிப்பு.

அதிரடி: ஜூன் 2018 வரை ஏர்டெல் டிவியின் இலவச சந்தா அறிவிப்பு.!

பார்தி ஏர்டெல் அதன் ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஏர்டெல் டிவி பயன்பாட்டில் உள்ள முழு உள்ளடக்கங்களுக்கும் வருகிற 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை அனைத்து ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச சந்தா அடிப்படையில் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் டிவி பயன்பாடு இப்போது 300-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது, இதில் 29 எச்டி சேனல்கள் உள்ளடங்கும் மற்றும் 6000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளும் அணுக கிடைக்கும். பிராந்திய வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஏர்டெல் டிவியின் பிராந்திய உள்ளடக்கத்தில் ஒரு பெரிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சந்தாவைப் பெற, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கி, நிறுவ வேண்டும் மற்றும் பின்னர் இலவச நன்மைகளை அனுபவிக்க வேண்டியது தான். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு தளங்களிலும் ஏர்டெல் டிவி ஆப் கிடைக்கிறது.
ஏர்டெல் டிவி ஆனது ஜீ, சோனி, என்டிடிவி, ஜெமினி, சன் டிவி மற்றும் என பல சேனல்களை திரைப்படங்கள், செய்திகள் மற்றும் இன்போடெயின்மென்ட் பிரிவுகளின் கீழ உள்ளடக்கியுள்ளது. உடன் ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, போஜ்பூரி, அசாமிஸ், ஒடியா, பிரஞ்சு மற்றும் உருது மொழிகளிலும் சேனல்கள் கிடைக்கும்.
ஏர்டெல் டிவி பயன்பாட்டில் ஸ்க்ரோல் பேக் அம்சமொன்றும் உள்ளது, இது பயனர்கள் வெறுமனே லைவ் ஊட்டங்களை மீண்டும் உருட்டவும் அல்லது தாமதமாக உள்நுழைந்திருந்தாலும் விருப்பமான ஒளிபரப்பை சரியாக காணவும் அனுமதிகுமென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment