Search This Blog

Sunday, 12 November 2017

வானிலை வார்னிங் - பிபிசி

சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்
சென்னை: வெள்ளம் ஏற்படுத்தும் வகையில் தென் இந்தியாவில் மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.
ஒரே நாளில் தாம்பரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது.
பெரும் சேதம்
பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
அன்றும் சொன்னது
அதேபோல கடந்த சில நாட்கள் முன்பாக, பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் வெள்ளம்
அதேபோல பெரும் மழை, சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

No comments:

Post a Comment